www.garudabazaar.com
iTechUS

‘ஜெயிலர்‘ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் மோகன்லால்.. தீயாய் பரவும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் சந்தித்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Mohanlal Rajinikanth joins in Jailer set latest viral pic

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கட்டாயத் திருமணம் அமிர்தாவிடம் கதறிய எழில்.. சூழ்ச்சி அறிந்து கொந்தளித்த பாக்யா.. Baakiyalakshmi

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தையும் அணணாத்த படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். 

Mohanlal Rajinikanth joins in Jailer set latest viral pic

Images are subject to © copyright to their respective owners.

மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Mohanlal Rajinikanth joins in Jailer set latest viral pic

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார் என சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Mohanlal Rajinikanth joins in Jailer set latest viral pic

Images are subject to © copyright to their respective owners.

மேலும், படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சந்தித்திருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மோகன்லால், 'ஜெயிலர்' மட்டும் அல்லாது லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ராஜஸ்தானில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "Update வந்தா பொண்டாட்டி கிட்ட கூட சொல்லமாட்டோம்..." - அப்செட் ஆன Jr NTR.? என்ன ஆச்சு.?

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal Rajinikanth joins in Jailer set latest viral pic

People looking for online information on Jailer, Mohanlal, Mohanlal Rajinikanth joins in Jailer, Rajinikanth will find this news story useful.