செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்ஜிகே படம் இன்று ரிலீசாகும் நிலையில், அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருப்பதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ், இளவரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது.
அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்🙏
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2019