விக்ரம் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல் - என்ன விஷயம் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரித்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.

Kamal Haasan visits Vikram's Kadaram Kondan Shooting spot

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, ஸ்ரீநிவாசன் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை 'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். இந்த படத்தின் 90 சதவிகித பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதாம்.

இந்த படத்தின் செட்டுக்கு திடீரென விசிட் அடித்துள்ள கமல் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.