“இது அவங்க முடிவு”- என்.ஜி.கே முதல் ஷோ பிளான் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோ வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya's NGK FDFS plans announced by Nikilesh Surya of Rohini Silver Screens

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோ குறித்த அறிவிப்பினை பிரபல திரையரங்கான ரோகினி சில்வர் ஸ்க்ரீன் உரிமையாளர் நிக்கிலேஷ் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘என்.ஜி.கே முதல் நாள் முதல் ஷோவை அதிகாலை 5.30 வெளியிடும் முடிவை படத்தின் தயாரிப்பாளர்களே எடுத்துள்ளனர். இதில் திரையரங்குளின் பங்கு ஏதும் இல்லை. ஒருவேளை 5.30 மணிக்கு முன்பாகவோ, அதற்கு பிறகோ படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்’ என தெரிவித்துள்ளார்.