‘ரூமுக்காவது போங்கடா’ - என்.ஜி.கே-வின் ரொமாண்டிக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ரொமாண்டிக் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Romantic Video promo from Suriya's NGK is out now

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

அனல் பறக்கும் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருத்தணியில் உள்ள சூர்யா ரசிகர்கள் சார்பில் சுமார் 215 அடி உயர ராட்சத கட்-அவுட் வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரொமாண்டிக் புரொமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், குல்ஃபி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டு சாய் பல்லவியுடன் சூர்யா ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி ரிலீசாகவுள்ளது.