செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஆகியோர் நடித்துள்ள படம் 'என்ஜிகே'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
யுவனின் இசையென்றாலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் செல்வராகவன் - யுவன் கூட்டணி என்றால் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது.
ஏனெனில் 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' போன்ற படங்களின் பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் இப்போது கோட்டாலும் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், அப்போது யுவன் பிராண்டின் லோகோ U1 என்று எழுதப்பட்டிருப்பது குறித்து அக்னி கேட்டார். அதற்கு பதிலளித்த யுவன் , 'அந்த ஐடியா என்னுடைய அப்பாதான் குடுத்தார்' என்றார்.
'பிங்க்' படத்தில் அமிதாப்பச்சன் ஒரு பாடல் பாடியிருப்பார். அப்படி 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித் பாடியிருக்கிறாரா? என்று அக்னி கேட்டார் . அதற்கு 'அஜித் பாடவில்லை' என்று யுவன் தெரிவித்தார். மேலும், 'நேர்கொண்ட பார்வை' ரொம்ப நல்லா வந்திருக்கு. உங்களுக்கு இந்த படத்துல நிறைய சர்ப்ரைஸ் இருக்கு என்றார்.
'நேர்கொண்ட பார்வை'யில் தல அஜித் பாடுகிறாரா ? - யுவன் பதில் வீடியோ