என்.ஜி.கே இடைவெளி சீன் சீக்ரெட் சொன்ன யுவன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

Yuvan Shankar Raja shares interesting things and Interval block scene in Suriya's NGK

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேக பேட்டியளித்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ‘என்.ஜி.கே’ திரைப்படம் குறித்தும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை, தனது சொந்த வாழ்க்கை பயணம், ஆன்மிகம் ஆகியவை குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்.

என்.ஜி.கே பற்றி பேசிய யுவன், ‘என்.ஜி.கே-வில் இடைவெளி பகுதியில் வரும் காட்சியில் சூர்யாவின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது. ஒரே எமோஷனை ஒரே ஷாட்டில் நடிப்பது ரொம்ப கஷ்டம், ஆனால் அதனை அசால்ட்டாக செய்துள்ளார். அந்த சீன் அற்புதமாக வந்திருக்கிறது’ என்றார்.

இதைத் தொடர்ந்து சூர்யா பற்றிய சுவாரஸ்யங்களை பகிர்ந்த யுவன், ‘பள்ளியில் சூர்யா எனது சீனியர். ரொம்ப நீட்டா இருப்பார். அவர் தான் ஸ்கூல் லீடரும் கூட. நான் எப்போதுமே லேட்டா தான் போவேன். பார்த்ததும் ஓரமா போய் நில்லுன்னு சொல்லிடுவார். ஆனால், இது பற்றி ஒரே படத்தில் பணியாற்றிய போது பேசியிருக்கிறார். உன்ன ஓட வச்சத மனசுல வச்சுக்கிட்டு தானே எனக்கு டான்ஸ் ஆட ரொம்ப கஷ்டமான பாட்டு போடுற’ என்றார்.

அனல் பறக்கும் வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

என்.ஜி.கே இடைவெளி சீன் சீக்ரெட் சொன்ன யுவன்..! வீடியோ