தெலுங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் NGK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரசியல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சூர்யாவின் என்ஜிகே படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

Suriya' NGK Telugu pre-release event is on 28th May at JRC Convention Center, Film Nagar, Hyderabad

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் என்ஜிகே. தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து இப்படம் அரசியல் கதையை மையப்படுத்திய படமாக உருவாக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நாளை ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டி பகுதியின் ஜேஆர்சி சென்டரில் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி அதாவது பட புரோமோஷன் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தெலுங்கு மற்றும் ஆந்திரா மாநில சேட்டிலைட் உரிமையை ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பாளர் கேகே ராதாமோகன் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இயக்குனர் செல்வராகவன், 7 ஜி பிருந்தாவன் காலனி, அதவரிமடலகு அர்தலேவேருலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.