www.garudabazaar.com
iTechUS

வெளிநாட்டில் மூத்த மகளுடன் சுந்தர் சி & குஷ்பு.. வைரலாகும் டூர் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பு & இயக்குனர் சுந்தர் சி தங்களது மூத்த மகளுடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Sundar C Kushbu Dubai Vacation Photos with family

Images are subject to © copyright to their respective owners.

Also Read | GP முத்துவுக்கு "ரஞ்சிதமே" பாட்டு சொல்லிக் கொடுத்த அமுது.. கடைசில ஒரு லைன் பாடுனாரு பாருங்க 😅!!

தமிழ் சினிமாவில் 85-90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.  பின் குணசித்திர வேடங்களில் குஷ்பு நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

Sundar C Kushbu Dubai Vacation Photos with family

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தார்.

Sundar C Kushbu Dubai Vacation Photos with family

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகை குஷ்பு தமது இளைய மகள் அனந்திதாவின் 20 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Sundar C Kushbu Dubai Vacation Photos with family

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை குஷ்பு, சுந்தர் சி மூத்த மகளுடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உயர் ராட்டினத்தில் இருக்கும் தமது வீடியோவையும் குஷ்பு பகிர்ந்துள்ளார். அதீத வேலைப்பளுக்கு இடையே மனதிற்கு பிடித்தவர்களுடன் சுற்றுலா வந்துள்ளதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Also Read | விமரிசையாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் கிரேஸ்.. புகைப்படங்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Sundar C Kushbu Dubai Vacation Photos with family

People looking for online information on Kushboo Sundar, Sundar C, Sundar C Kushbu Dubai Vacation Photos will find this news story useful.