www.garudabazaar.com
iTechUS

GP முத்துவுக்கு "ரஞ்சிதமே" பாட்டு சொல்லிக் கொடுத்த அமுது.. கடைசில ஒரு லைன் பாடுனாரு பாருங்க 😅!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகப்பெரிய பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் சமீபத்தில் நடைபெற்றிருந்தது.

Amudhavanan and GP Muthu singing Ranjithame song

Image Credit : Vijay Television

Also Read | "என் மக்களுக்கு நன்றின்னு சொல்லும் போது தெரியலையா?".. Vote பற்றிய விமர்சனம்.. அசிம் பதில் இதுதான்

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், சவாலான டாஸ்க் என மொத்தமும் இந்த பிக் பாஸ் சீசன் விறுவிறுப்பு நிறைந்த வண்ணம் தான் இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் முன்னேறி இருந்தனர். இதில் அசிம் டைட்டில் வின்னராகவும், விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து நிறைய நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குறித்த பேச்சுகள் இணையத்தில் அதிகம் பரவலாகவும் இருந்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியும் நடந்துள்ளது. பொதுவாக பிக் பாஸ் சீசன் முடியும் போது அதில் வரும் போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற பெயரில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது.

Amudhavanan and GP Muthu singing Ranjithame song

இதில் ஏறக்குறைய அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் அமுதவாணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது. தனது யூடியூப் சேனலில் கடிதங்கள் படித்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரும் பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்து வருகிறார்.

Amudhavanan and GP Muthu singing Ranjithame song

அப்போது அமுதவாணனும் அவரும் சேர்ந்து, விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் வரும் "ரஞ்சிதமே" என்ற பாடலை சேர்ந்து பாடுகின்றனர். முதலில் அமுதவாணன் பாட அவரை பின்பற்றி ஜிபி முத்துவும் பாடுகிறார்.

அப்படி இருக்கையில் பாட்டின் டியூனிற்கு ஏற்ப அமுதவாணனை குறிப்பிட்டு, "அம்பலவாணனை தூக்கி போட்டு பிசுக்க வெச்சான்" என ஜாலியாக சில கருத்துக்களை பாடவும் செய்கிறார் ஜிபி முத்து. இது தொடர்பான வீடியோ, பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Also Read | விமரிசையாக நடந்த கருணாஸ் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீரில் கிரேஸ்.. புகைப்படங்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan and GP Muthu singing Ranjithame song

People looking for online information on Amudhavan, GP MUTHU, Ranjithame Song will find this news story useful.