Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

"பொண்டாட்டி பத்தி நெனப்பே இல்ல அவருக்கு".. மேடையில் கலாய்த்த Kushbu.. Cute'பா இவங்க 2 பேரும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் அனைவரும் ரசிக்கும் வகையில், ஜனரஞ்சகமான திரைப்படம் எடுப்பதில் பெயர் போனவர் இயக்குனர் சுந்தர். சி.

Kushbu about sundar c in coffee with kadhal shooting

Also Read | "ஸ்பெஷல் மீட்டிங்".. செல்வராகவன் குடும்பத்தினருக்கு Surprise கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்தும் திரைப்படங்கள் இயக்கி உள்ள சுந்தர். சி, ஏராளமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடைசியாக, 'அரண்மனை 3' படத்தை இயக்கி இருந்த இயக்குனர் சுந்தர். சி, மறுபக்கம் திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து, சுந்தர். சி அடுத்ததாக இயக்கியுள்ள "காபி வித் காதல்" திரைப்படத்தின் டிரெயிலர், சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Kushbu about sundar c in coffee with kadhal shooting

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோர், இந்த படத்தை தயாரித்துள்ளனர். சுந்தர். சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, மறைந்த நடிகர் மற்றும் இயக்குனர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

காபி வித் காதல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. காபி வித் காதல் திரைப்படம் தொடர்பாக, படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Kushbu about sundar c in coffee with kadhal shooting

அந்த வகையில், சுந்தர். சியின் மனைவியும், நடிகையுமான நடிகை குஷ்பு நிகழ்ச்சி மேடையில் பகிர்ந்து கொண்ட தகவல்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

காபி வித் காதல் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் தொடர்பான நிகழ்வை பகிர்ந்து கொண்ட நடிகை குஷ்பு, "ஊட்டியில் ஷூட்டிங் நடந்த போது மூன்று நாட்கள் தான் போனேன். எனக்கு வேற வழி இல்லை. எனது திருமண நாள் வந்ததால், என் வீட்டுக்காரர் திரும்பி வரமாட்டார் என்பதால் அன்றைய தினத்தில் அவரை பார்க்க வேண்டும் என்று தான் சென்றேன். அங்கே 38 நாட்கள் ஷூட்டிங் நடந்தது.

ஆனால் ஒரு நாள் கூட நீ எப்போது வருவாய் என என்னை போனில் அழைத்து அவர் கேட்கவே இல்லை. ஏனென்றால், அவர் அவ்வளவு சந்தோசமாக இருக்கிறார். பொண்டாட்டி பற்றிய நினைப்பே வரவில்லை. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், DD உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் இருந்ததால் சுந்தர் சி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்" என குறிப்பிட்டார்.

Kushbu about sundar c in coffee with kadhal shooting

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் குஷ்பு வரும் "ரம் பம் பம்" பாடலின் ரீமிக்ஸ், காபி வித் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. தான் நிஜமாக ஆடிய பாடலின் ரீமிக்ஸில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் இந்த மேடையில் நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதில் சொன்ன சுந்தர். சி, "ரம் பம் பம் பாடலுக்கு குஷ்புவை ஆட வைத்து ரீல்ஸ் ஒன்றை பின்பு வெளியிடுகிறேன்" என ஜாலியாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இந்த 22 வருசத்துல".. செல்ல மகள் பிறந்தநாளில் நடிகை குஷ்பு பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!!

"பொண்டாட்டி பத்தி நெனப்பே இல்ல அவருக்கு".. மேடையில் கலாய்த்த KUSHBU.. CUTE'பா இவங்க 2 பேரும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kushbu about sundar c in coffee with kadhal shooting

People looking for online information on Coffee with kadhal shooting, Kushboo, Kushboo Sundar, Sundar C will find this news story useful.