www.garudabazaar.com

Breaking: சுந்தர் C-யின் பிளாக்பஸ்டர் sequel 'அரண்மனை' .. அடுத்த பார்ட் வருதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் இருக்கிறது.

Blockbuster sequel Aranmanai 4 by Sundar C

Also Read | Baakiyalakshmi: "ராதிகாவும் நல்லவங்க தான்.. கோபி ஏமாத்துறாருல.?" - ரசிகருக்கு ரேஷ்மா பதில்

அதிலும் பேய் படங்களில் பல நடிகர்கள் நட்சத்திர பட்டாளமாக இணைந்திருக்க, அதில் காமெடியை இணைத்து குடும்பங்கள் கொண்டாடும் அல்லது குடும்பத்தோடு சென்று பார்க்கும் மசாலா படங்களாக வழங்குவது என்பது அநேகமான ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு முக்கியமான ஃபார்முலாவாக மாறி இருக்கிறது.

இந்த பாணியை கையில் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சுந்தர்.சி. முன்னணி நடிகர்களின் இயக்கத்தில் பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுந்தர்.சி, பிற்காலத்தில் நடிக்கவும் தொடங்கினார். இவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் அரண்மனை முதல் பாகம் வெளியானது. இந்த திரைப்படம் பெரும் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அரண்மனை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரானது.

Blockbuster sequel Aranmanai 4 by Sundar C

இதனைத் தொடர்ந்து அரண்மனை திரைப்படத்தின் மூன்றாவது பாகமும் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படங்களில் ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம் உள்ளிட்ட நடிகைகள் நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார். நகைச்சுவைக்கு என்று யோகி பாபு, மனோபாலா, சந்தானம், சித்ரா லட்சுமணன், கோவை சரளா உள்ளிட்டோர் இந்த படங்களில் நடித்திருக்கின்றனர்.

Blockbuster sequel Aranmanai 4 by Sundar C

அரண்மனையை மையமாக வைத்து உலாவும் பேய், அரண்மனையில் இருக்கும் முக்கிய கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து விட, அந்த பேயின் தீராத ஆசையை கண்டுபிடிக்கும் சுந்தர்.சி ஒவ்வொரு பார்ட் திரைப்படத்திலும் ஒவ்வொரு உத்தியை செய்து கடவுள், சமய சடங்குகள், கிரக நிலைகள் மற்றும் ரிஷிகளின் துணையோடு பேயை வெளியேற்றுவார்.

இதற்கான கதைக்களம் ஒவ்வொரு பார்ட்டிலும் மாறினாலும் அனைத்துமே அரண்மனை என்கிற ஒரு புள்ளியில் இணைகிற கதைகளாக இருக்கும். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த தொடர் வரிசை திரைப்படத்தின் அடுத்த பாகம் குறித்த தகவல் தான் தற்போது தெரிய வந்திருக்கிறது.

Blockbuster sequel Aranmanai 4 by Sundar C

ஆம், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படத்தின் நான்காவது பாகம் வெளிவர உள்ளதாக நம்பர் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர், நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக நாம் காத்திருக்கலாம்.

Also Read | Breaking: சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்தில் கைகோர்க்கும் நடிகை இவரா.?

தொடர்புடைய இணைப்புகள்

Blockbuster sequel Aranmanai 4 by Sundar C

People looking for online information on Aranmanai, Sundar C will find this news story useful.