Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

Coffee With Kadhal : “என் பாட்டு இருக்கு.. ஆனா என்னையே ஆட கூப்டல..” - செல்லமாக கோவப்பட்ட குஷ்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Kushbhu jolly complaint Over Sundar C Coffee With Kadhal trailer

Also Read | Coffee With Kadhal படக்குழுவினர் 200 பேரின் குடும்பத்துக்கும்.. தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு.!

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது..

Kushbhu jolly complaint Over Sundar C Coffee With Kadhal trailer

இந்தப்படத்தின் ஆடியோ மற்றும் இசை விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசும்போது, ‘நான் ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்க எனது கணவர் சுந்தர்.சி தான் காரணம். ஒரு தயாரிப்பாளராக சொல்கிறேன் அவரை நம்பி தாராளமாக காசு போடலாம்.. தயாரிப்பாளர்கள் நிம்மதியாக போய் தூங்கலாம்.. இந்த படத்தை 35 நாட்கள் ஊட்டியில் படமாக்கினார்கள். ஒரு நாள் கூட என்னை படப்பிடிப்பிற்கு வா என சுந்தர்.சி அழைத்ததே இல்லை. என்னுடைய திருமணநாள் வருகிறதே என்று நானாக அவரிடம் போன்செய்து கேட்டபின் மூன்று நாட்கள் ஊட்டிக்குச் சென்று படக்குழுவினருடன் தங்கியிருந்தேன்.

Kushbhu jolly complaint Over Sundar C Coffee With Kadhal trailer

இந்த படத்தில் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்த நேரத்தில் இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்த படத்தில் நான் நடித்த ரம்பம்பம் பாடலை பயன்படுத்தியுள்ளார்கள் ஆனால் அதில் ஆடுவதற்கு என்னை அழைக்கவில்லை. நாளை பாடலை படமாக்க இருக்கிறார்கள் என்றால் சென்னையில் இருக்கும் என்னிடம் அதற்கு முதல் நாள் இந்த பாடலை படமாக்க போகிறோம் என்று கூறினார் சுந்தர்சி.. மற்றவர்கள் இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவங்க ஆடி ஏற்கனவே அந்த பாடலை எல்லாம் பாத்துட்டாங்கல்ல என்று சமாளித்தார்” என தனது கணவர் சுந்தர்.சி பற்றி ஜாலியாக புகார் பத்திரம் வாசித்தார் நடிகை குஷ்பு.

Kushbhu jolly complaint Over Sundar C Coffee With Kadhal trailer

Also Read | போடு.! பிரபல தமிழ் TV சேனலில் ஒளிபரப்பாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'... எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Kushbhu jolly complaint Over Sundar C Coffee With Kadhal trailer

People looking for online information on Coffee with kadhal, Sundar C will find this news story useful.