Veetla Vishesham Others Page USA

"சீரியல் கில்லர் வரும்போது ஒரு copy cat-ம் வருவான்.." - ஜெய், சுந்தர்.C நடிக்கும் ‘பட்டாம்பூச்சி’ Sneak peek

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி மற்றும் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

Jai sundar c pattampoochi sneak peek video released

Also Read | ”நொடியில் வில்லன் ஆக்கப்பட்ட தேசபக்தர்…” ராக்கெட்ரி.. புது போஸ்டரை வெளியிட்ட மாதவன்.!

பட்டாம்பூச்சி

சைக்கோ த்ரில்லர் படங்களுக்கென சினிமா ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அப்படி ஒரு படமாக அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்.சி, ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் இவற்றுடன் வெளியான டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை அதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்குமுன் வெளியான சைக்கோ த்ரில்லர் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட படமாகவும் இது இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கதைக்களம்…

1980களில் நடக்கும் இந்த சைக்கோ திரில்லர் கதையில் சுந்தர்.சி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, முதன்முறையாக சைக்கோ வில்லனாக ஜெய் நடித்துள்ளார். எட்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளார். நடிகை ஹனி ரோஸ் தற்போது வெளியாகியுள்ள டீசரும் இந்த மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தியே உருவாகியுள்ளது. இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.

Jai sundar c pattampoochi sneak peek video released

ரிலீஸ்…

பட்டாம்பூச்சி திரைப்படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் சிறையில் இருக்கும் கொலைகாரரான ஜெய்யிடம் விசாரணை நடத்த போலீஸான சுந்தர் சி ஒரு பத்திரிக்கையாளரை அனுப்புகிறார். இந்த பரபரப்பான காட்சி படத்தின் மீதான் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

 

Also Read | "Beast- ல நானும் விஜய்யும் மீட் பண்ற Scene… ஆனா" .. விருது விழாவில் செல்வராகவன் சொன்ன Secret

 

தொடர்புடைய இணைப்புகள்

Jai sundar c pattampoochi sneak peek video released

People looking for online information on Jai, Pattampoochi, Pattampoochi sneak peek video, Sundar C will find this news story useful.