STR இஸ் பேக் -“அட தாறுமாறு ஸ்டாரு இவன் எஸ்.டி.ஆரு”

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகி வருகிறது மஹா. இந்தப் படத்தை ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகிறார்.

STR starts shooting for Hansika’s 'Maha'!

ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர் சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,  சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் சிம்பு.

அவரை படக்குழுவினர் மாலையிட்டு வரவேற்றுள்ளனர். அதற்கான புகைப்படங்களை படத்தின் இயக்குநர் ஜமீல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது சிம்பு ஹன்சிகா இருவரும் படப்பிடிப்பு தலத்தில் இருக்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குநர் ஜமீல் வெளியிட்டுள்ளார்.

 

Tags : Simbu, Hansika, Maha