'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு, 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பாடல் ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் உலவியது. இந்த பாடல் யுவன் இசையில் 'மாநாடு' படத்துக்காக என்ற தகவலும் பகிரப்பட்டு வந்தது.
இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்துள்ளார். அதில், 'அது உண்மை இல்லை. அது என்னுடைய டியூன் இல்லை' என தெரிவித்துள்ளார்.