அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் '100' . இந்த படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த மே 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபு , ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் Sneak peek வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ராதாரவி, அதர்வாவிற்கும் யோகி பாபுவிற்கும், ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்கிறார். அப்போது ஒருத்தரை பார்த்து இவர் முருகதாஸ் என்று சொல்ல, கத்தி டைரக்டரா சார் என தன் ஸ்டைலில் நக்கலாக கலாய்க்கிறார்.
''இவர் தான் முருகதாஸ், கத்தி டைரக்டரா சார் ?'' - யோகிபாபு நக்கல் வீடியோ
Tags : Atharva, Yogi Babu, 100, Hansika Motwani