ஹரிஷ் கல்யாணின் ஹிந்தி ரீமேக் பட டைட்டில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் ஹிந்தி ரீமேக் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Harish Kalyan's hindi remake of Vicky Donor titled as Dharala Prabhu

தற்போது சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்ட்டி மற்றும் ரெபா மோனிகா ஆகியோர் முன்னணி நாயகிகளாக நடிக்கின்றனர்.

விஷால் நடித்த ‘அயோக்யா’ திரைப்படத்தை வெளியிட்ட ஸ்க்ரீன் சீன் நிறுவனம் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தயாரிக்கிறது. இதனிடையே, சூப்பர்ஹிட் ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்திற்கு ‘தாராள பிரபு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ‘விக்கி டோனார்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ப இப்படத்தில் விந்தணு தானத்தின் முக்கியத்துவம் குறித்து பேசப்படும் என தெரிகிறது.

ஹிந்தி படத்தில் இருக்கும் அளவிற்கு அடல்ட் கண்டென்ட் இல்லாமல், கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் மோசடி குறித்து பேசப்படும் என்றும், இது ஒரு ஃபேமிலி எண்டர்டெய்னர் படமாக இருக்கும் என்றும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், இது பற்றிய அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.