சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரஸா, பிரபு, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்க, இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து நடிகர் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சிம்புவின் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள சிம்பு சம்மதித்து விட்டதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது சிம்புக்கு ஏற்ற பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்துவருகின்றனர்.