அரண்மனை சீரிஸுக்கு பின் மீண்டும் ஹாரர் படத்தில் ஹன்சிகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி உள்ளிட்டோர் நடித்த ‘குலேபகாவலி’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

Hansika is teaming up with Gulaebhagavali director Kalyan for a Horror film

தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரின் கீழ் உருவாகி வரும் ஜாக்பாட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜோதிகா, ரேவதி நடித்துள்ள ‘ஜாக்பாட்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கல்யாண், அடுத்ததாக ஹாரர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோது, இப்படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதகாவும், முனீஸ்காந்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு காற்றின் மொழி படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஹெச்.காசிஃப் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை’, ‘அரண்மனை 2’ ஆகிய திரைப்படங்களில் பேயாக ஹன்சிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.