''சிறப்பா நடிச்சிருக்கீங்க'' - இந்த சூப்பர் ஸ்டாருக்கு துணைக் குடியரசுத் தலைவர் பாராட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து கடந்த மே 9 ஆம் தேதி வெளியான படம் 'மஹார்ஷி'. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அல்லரி நரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vice President Venkaiah Naidu Appreciates Mahesh Babu and Maharshi

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாித்துள்ளது.

விவசாயிகளின் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து இந்திய துணை ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''இந்த படம் விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்த உரையாடல்களின் அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் 'மஹர்ஷி' ஒரு முக்கிய படம்.  மேலும் இந்க படம் கிராமபுற மனிதர்களையும் விவசாயிகளையும் இந்த படம் உயர்வாக பேசியிருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மகேஷ் பாபுவின் நடிப்பையும், வம்சியின் சிறப்பான இயக்கத்தையும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள மகேஷ் பாபு, இந்த பாராட்டு என்னையும் என் படக்குழுவினரையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது. நன்றி சார், உங்களது இத்தகைய வார்த்தைகள் என்னையும் என் படக்குழுவினரையும் மஹர்ஷி போன்ற படங்களை மேலும் செய்வதற்கு தூண்டும் விதமாக உள்ளது.என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் தெலுங்கில் 'சின்ன பாபு' என்று வெளியாகியிருந்தது. அந்த படம் விவசாயம் குறித்தும் உறவுகளின் மேன்மை குறித்தும் பேசியிருப்பதாக பாராட்டியிருந்தார்.