தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மஹா’. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
திரில்லர் கதையை மர்மமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், ஹன்சிகாவிற்கு ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பி ராமைய்யா, கருணாகரன், நாசர் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.சிம்பு இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக அறிந்திருந்தனர்.
இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் காட்சிகள் இன்று முதல் துவங்கியதாக இயக்குனர் ஜமீல் பதிவு செய்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவராமல் இருந்த STR ரசிகர்களுக்கு, இச்செய்தி இனிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.