“தேவராட்டம்” முத்தையா இயக்கத்தில் சிம்பு ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவுதம் கார்த்திக் நடித்த 'தேவராட்டம்' படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu Next With Director Devarattam Frame Muthaiya denial

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில், ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களின் சாயலில், மீண்டும் ஒரு கிராமத்து அதிரடி ஆக்சன் கதையை முத்தையா சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, முத்தையா-சிம்பு கூட்டணி அமைப்பது குறித்த தகவல் மறுக்கபட்டுள்ளது. அடுத்ததாக வெங்கப் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

Tags : Simbu, Muthaiah