தமிழக அரசின் இந்த குழுவில் இடம் பெற்ற நடிகர் சரவணன்! - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 11, 2019 11:19 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து சரவணன் சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் சரவணனுக்கு புதிய பதவி ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது.இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மானியம் பெற தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நீதிபதி குணசேகரன் என்பவரை தலைமையாக கொண்ட இந்த தேர்வுக்குழுவில் நடிகர் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் ஆர்வி. உதயகுமார், சிங்கமுத்து ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.