‘பேட்ட’ இயக்குநருடன் தனுஷ் இணையும் படத்தில் இணைந்த பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

Kalai Arasan Joins in The Set Of Dhanush Karthik Subbaraj Project

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடிக்கின்றனர்

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரபல நடிகர் கலையரசன்  இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. கலையரசன் மெட்ராஸ், கபாலி, ஐரா  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.