777 Charlie Trailer

இளையராஜா, AR ரஹ்மான், வைரமுத்து பங்குபெற்ற ‘SPB 75’… பிரபல சேனலில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த பாடகர் SPB அவர்களின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

SPB 75 telecast date and time announced by Vijay tv

Also Read | S J சூர்யா பட தயாரிப்பாளர்களோடு கைகோர்த்த விமல்… Title உடன் வெளியான BTS pics

SPB மறைவு…

பல இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகில், குறிப்பாக இசையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல முன்னணிக் கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

SPB 75 telecast date and time announced by Vijay tv

மீளாத்துயரில் இசை ரசிகர்கள்…

அவரது மறைவை ஒட்டி பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்தும், அவருடைய பாடல்கள் குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்துமான நினைவலைகளை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, இசைக்கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த நினைவலைகள் நிகழ்வில் பேசும்போது, ”மருத்துவமனையில் கிரிட்டிகலான சூழலில் இருந்த போது, யாரையாவது பார்க்க விரும்புகிறீர்களா? என்று கடைசியாக கேட்டதற்கு ராஜா இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று  கூறினாராம்.” என்று பேசியது ரசிகர்களை நெகிழச் செய்தது.

SPB 75 telecast date and time announced by Vijay tv

SPB 75…

இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி SPB-ன் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு. “SPBliveson” என்ற பெயரில் கச்சேரி ஒன்றை அவரது மகன் SPB சரண் நடத்தினார். இந்த கச்சேரியில் தமிழ் சினிமாவின் மூத்த இசைக் கலைஞர்களான பி சுசீலா மற்றும் எஸ் ஜானகி, இளையராஜா, தேவா, ஏ ஆர் ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 19 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

SPB 75 telecast date and time announced by Vijay tv

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு…

இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில், வைரமுத்து, ரஹ்மான் ஆகியோர் SPB பற்றி பேசுகிறார்கள். இசைஞானி இளையராஜா தன்னுடைய நெருங்கிய நண்பரின் பாடலைப் பாடி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். மேலும் அமர்ந்திருக்கையில் கண்கலங்கியவாறே அமர்ந்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை உணர்ச்சிவசப் படவைத்துள்ளன.

SPB 75 telecast date and time announced by Vijay tv

Also Read | குழந்தையுடன் காஜலின் லேட்டஸ்ட் Photo… பிரபல முன்னணி ஹீரோயின்களின் viral கமெண்ட்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

SPB 75 telecast date and time announced by Vijay tv

People looking for online information on SP Balasubrahmanyam, SPB, SPB 75 telecast, Vijay tv will find this news story useful.