RRR Others USA
www.garudabazaar.com

Raja Rani 2: “எல்லாத்துக்கும் காரணம் அவருதான்”… உருகும் சந்தியா claps வாங்கிய சரவணன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி சீரியலின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.

Vijay tv Raja rani 2 new video went viral

சூர்யா - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படம்.. வெளியான Release தேதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ராஜா ராணி 2….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் வெற்றிகரமான ஒன்றாக அமைந்தது. இந்த தொடரில் ஜோடியாக நடித்த சஞ்சீன் கார்த்தி மற்றும் ஆல்யா மானசா இப்போது நிஜ ஜோடியாகிவிட்டனர். இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட ராஜா ராணி 2 சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிவருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசா விலக அவருக்கு பதிலாக இப்போது ரியா, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Vijay tv Raja rani 2 new promo went viral

சந்தியாவின் ஐபிஎஸ் கனவு…

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக சொல்கிறாள். அதைக் கேட்ட சரவணன் எப்படியாவது சந்தியாவை போலீஸ் ஆக்குவேன் என்றும் இனிமேல் சந்தியா போலீஸ் ஆவது அவளின் கனவு மட்டும் இல்லை தன்னுடைய கனவும்தான் என்று அவளை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். ஆனால் சந்தியா குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலை வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடுகிறாள்.

சந்தியாவை மாற்றிய பொய் வழக்கு…

இந்நிலையில் சரவணன் தன்னுடைய கடையில் தடைவிதிக்கப்பட்ட போதைப் பொருட்களை விற்றதாக பொய் வழக்கு போடப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்படுகிறார். காவல் நிலையத்தில் வைத்து சரவணனை போலீஸார் அடித்து துன்புறுத்த அதைப் பார்க்கும் சந்தியா மனமுடைந்து போகிறார். அப்போது சரவணன் சந்தியாவிடம் ‘உங்கள மாதிரி நல்லவங்க எல்லாம் போலீஸ் வேல வேணாம்னு ஒதுங்கி போகிறீர்கள்.. அதனாலதான் பொறுக்கிங்க எல்லாம் போலீஸ் ஆகுறாங்க’ என சொல்கிறார். இதைக் கேட்ட சந்தியா போலீஸ் வேலைக்கு படிப்பதற்கான முடிவை எடுக்கிறாள்.

Vijay tv Raja rani 2 new video went viral

கோச்சிங் செண்டரில் சந்தியா….

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் புதிய வீடியோ துணுக்கு இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. அதில் சந்தியாவின் UPSC தேர்வுகளுக்காக அவளை ஒரு கோச்சிங் செண்டரில் சரவணன் சேர்க்கிறார். அந்த கோச்சிங் செண்டரில் தன்னைப் பற்றிய அறிமுகத்தில் ‘சந்தியா இருண்டு கிடந்த வாழ்க்கையில் நம்பிக்கையாக எப்படி சரவணன் இருக்கிறார் என்பதையும், தனது படிப்புக்காக அவர் செய்த தியாகங்களையும் சொல்லி அவரை பெருமைப்படுத்துகிறார். இதையடுத்து வெளியே இருக்கும் சரவணனை வகுப்பறைக்கு வரவழைத்து சக மாணவர்களும் ஆசிரியரும் அவரைக் கைதட்டி பெருமிதப்படுத்துகின்றனர்.

Vijay tv Raja rani 2 new video went viral

”விஜய் பட வாய்ப்பு மட்டும் கெடச்சா…”… தமனின் கனவு நனவாயிடுச்சு - viral video!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv Raja rani 2 new video went viral

People looking for online information on Raja Raji 2 Serial, Raja Rani 2, Raja Rani 2 Serial Episode, Vijay Television will find this news story useful.