777 Charlie Trailer

குழந்தையுடன் காஜலின் லேட்டஸ்ட் Photo… பிரபல முன்னணி ஹீரோயின்களின் viral கமெண்ட்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தயோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Kajal agarwal latest click with his child

Also Read | “டில்லி meets ரோலக்ஸ்?... இந்த universe-அ உருவாக்குனதே..” லோகேஷ் சொன்ன exciting தகவல்

காஜல் அகர்வால்…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த காஜல் அகர்வால், சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. அதையடுத்து காஜல் அகர்வால் தன் கணவருடன் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றார். அதையடுத்து சில மாதங்களுக்கு முன் காஜல் அகர்வால்  தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல்  என்று பெயர் வைத்துள்ளனர்.

Kajal agarwal latest click with his child

முதல்முறையாக…

சமீபத்தி முதல் முறையாக காஜல் இப்போது முதல் முறையாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு “நீ எவ்வளவு விலைமதிப்பற்றவன். நான் உன்னை என் கைகளில் பிடித்தேன். உன் சிறிய கையை என் கைக்குள் பிடித்து, உன் சூடான சுவாசத்தை உணர்ந்தேன். நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் எல்லாம், உண்மையில். வரவிருக்கும் ஆண்டுகளில், நான் உனக்குக் என்னால் கற்பிக்க முடிந்த அனைத்தையும் கற்பிப்பேன். ஆனால் நீ ஏற்கனவே எனக்கு எல்லையற்றவைகளைக் கற்றுத் தந்திருக்கிறாய். தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளாய். தன்னலமற்றவளாக இருக்கக் கற்றுக் கொடுத்தாய். தூய அன்பை எனக்குக் கற்றுக் கொடுத்தாய். மேலும் நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இவை அனைத்தையும் நான் முதலில் அனுபவிக்கும் காரணமாக இருந்ததற்கு நன்றி. இந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை. கடவுள் உன்னை தேர்ந்தெடுத்தார், என் சிறிய இளவரசன்.” என மகனை உச்சிமுகர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

Kajal agarwal latest click with his child

குழந்தையோடு காஜல்…

இந்நிலையில் இப்போது குழந்தையின் முகம் தெரியும் விதமாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தோடு “The love of my life” என்ற கேப்ஷனும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் பிரபல நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கமெண்ட் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Also Read | ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ஜி வி பிரகாஷ்… பிறந்தநாளில் மாஸாக வெளியான ’இடிமுழக்கம்’ first look

தொடர்புடைய இணைப்புகள்

Kajal agarwal latest click with his child

People looking for online information on Kajal Agarwal, Kajal agarwal latest picture, Kajal agarwal latest picture with his child will find this news story useful.