777 Charlie Trailer

‘விக்ரம்’ பார்த்த ‘அவ்வை சண்முகி’ மேக்கப் மேன் மகள்.. இவங்க ஹாலிவுட் நடிகையா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Vikram Success Kamal Deserves Hollywood actress McKenzie Westmore

Also Read | குழந்தையுடன் காஜலின் லேட்டஸ்ட் Photo… பிரபல முன்னணி ஹீரோயின்களின் viral கமெண்ட்ஸ்

லோகேஷ் கனகராஜின் தேர்ந்த எழுத்தும், மல்டிவெர்ஸ் திரைக்கதையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் இருந்ததாக பலரும் குறிப்பிட்டு விக்ரம் திரைப்படத்தினை தியேட்டரில் சென்று பார்த்து கொண்டாடி வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாடல்களும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றன.

விக்ரம் திரைப்படத்தின் இந்த வெற்றிகளை அடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நடிகர் கமல்ஹாசன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்தார். இதேபோல் இந்த திரைப் படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு பைக்குகளை கமலஹாசன் பரிசாக அளித்தார். மேலும் இந்த திரைப்படத்தில் ரோலக்ஸ் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் ரோலக்ஸ் வாட்ச்சை கமல்ஹாசன் பரிசாக அளித்திருந்தார்.

Vikram Success Kamal Deserves Hollywood actress McKenzie Westmore

இப்படி ரசிகர்கள், படக்குழுவினர் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியிட்டிருந்தார். வசூல் ரீதியாகவும் சாதனைகளை புரிந்து வரும் விக்ரம் திரைப்படம் குறித்து பிரபல அவ்வை சண்முகி, இந்தியன் படங்களின் மேக்கப் ஆர்டிஸ்ட் மகள் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Vikram Success Kamal Deserves Hollywood actress McKenzie Westmore

நடிகர் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி (கே.எம்.சரத்குமாருடன் இணைந்து), இந்தியன் மற்றும் தசாவதாரம் திரைப்படங்களில் மேக்கப் மற்றும் மேக்கப் அட்வைஸராக பணிபுரிந்தவர் பிரபல அமெரிக்க ஒப்பனைக் கலைஞர் மைககேல் வெஸ்ட்மோர். இவருடைய மகள் தான் மெக்கென்ஸி வெஸ்ட்மோர். ஹாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மெக்கென்ஸி, ஃபேஷன் என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

Vikram Success Kamal Deserves Hollywood actress McKenzie Westmore

இவர்தான் தற்போது கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், விக்ரம் படம் கர்ஜணையான ஒரு வெற்றியை பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றிக்கு உரித்தானவர் கமல்ஹாசன் என்றும் மெக்கென்ஸி குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், “ஆஹா, இவர் ஹாலிவுட் நடிகையா..?” என்று வியந்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | "அப்பவே கமல் படத்துல கிராஸ் ஓவரா.?".. இது பாரதிராஜாவின் மல்டிவெர்ஸ்.. இதான் இப்போ செம Trending

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Success Kamal Deserves Hollywood actress McKenzie Westmore

People looking for online information on Kamal hassan, KAMALHAASAN, Lokesh Kanagaraj, Mckenzie Westmore, Vikram Movie will find this news story useful.