‘விக்ரம்’ மாஸ் வசனத்தை பல்ராம் நாயுடு பேசினா எப்படி இருக்கும்? தெறிக்கவிட்ட கமல்..viral video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாக உள்ளது.

Kamal lokesh participated in Vijay tv vikram special programme

நான்காண்டுகளுப் பிறகு திரையில் கமல்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்துக்கு U A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.Kamal lokesh participated in Vijay tv vikram special programme

திரையில் கமல்ஹாசனைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகாகவே இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.

விக்ரம் திரைப்படத்தை வெளியிடும் நிறுவனங்கள்…

தமிழில் விக்ரம் திரைப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கில் ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் பென் ஸ்டுடீயோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளிநாட்டு உரிமையை ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதையடுத்து படத்துக்காக இந்தியா முழுவதும் சென்று ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயகுனர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்றனர்.

Kamal lokesh participated in Vijay tv vikram special programme

விஜய் தொலைக்காட்சியில் விக்ரம் ஸ்பெஷல்…

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு ‘விக்ரம் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு படம் சம்மந்தமான சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கமல் விக்ரம் படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ’பாத்துக்கலாம்’ என்ற மாஸ் வசனத்தை தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு பேசினால் எப்படி இருக்கும் என்று பேசிக்காட்ட, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரமாக அதை ரசித்து வரவேற்றனர். இந்த ப்ரோமோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Kamal lokesh participated in Vijay tv vikram special programme

 

தொடர்புடைய இணைப்புகள்

Kamal lokesh participated in Vijay tv vikram special programme

People looking for online information on Kamal, Lokesh, Vijay tv, Vikram will find this news story useful.