"நிறைய பேர் ஏமாத்தி.." புகழ் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் மத்தியில் உருவான பரபரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு, அது இது எது, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் புகழ்.

Vijay tv pugazh latest insta video viral among fans

அதிலும் குறிப்பாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள், புகழை அதிக அளவில் பிரபலம் ஆக்கி இருந்தது.

இதன் காரணமாக, தன்னுடைய பயணத்திலும் அடுத்த கட்டத்திற்கு சென்றார் புகழ். என்ன சொல்ல போகிறாய், வலிமை, சபாபதி உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்திருந்தார் புகழ்.

ஹீரோவாக களமிறங்கும் புகழ்

இதனைத் தொடர்ந்து, Mr Zoo Keeper என்ற படத்தில், நாயகனாகவும் புகழ் நடித்து வருகிறார். இந்த படத்தினை ஜே சுரேஷ் இயக்க, பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். குக் வித் கோமாளி, திரைப்படங்கள் என பிசியாக இருக்கும் புகழ், மறுபக்கம் வெளியூர் நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்து கொண்டு வருகிறார்.

Vijay tv pugazh latest insta video viral among fans

நிறைய பேர் ஏமாத்துறாங்க..

இந்நிலையில், புகழ் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, தான் வெளியிட்டு இருந்த வீடியோவில் பேசும் புகழ், "நான் ஈரோடு, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிக்காக நான் வருவதாக கூறி, எனது பெயரை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல், எனது பெயரை உபயோகித்து பணமும் அவர்கள் வாங்கிக் கொள்வதாக நான் கேள்விப்பட்டேன்.

தயவு செய்து யாருக்கும் நீங்கள் பணம் கொடுக்க  வேண்டாம். யாரையும் நம்பவும் வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே வீடியோவை கொடுத்து விடுவேன். வரும் 4 ஆம் தேதி, நான் வருவதாக கூறி, 5,000 ரூபாய் பணத்தை அக்கவுண்ட்டில் போட்டுள்ளார்கள். ஆனால், நான் பிலிப்பைன்ஸில் இருப்பது அனைவருக்கும் தெரியும். தயவு செய்து யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நான் வருவதாக இருந்தால், நானே உங்களிடம் உறுதி செய்கிறேன். நன்றி மக்களே" என புகழ் தெரிவித்துள்ளார்.

Vijay tv pugazh latest insta video viral among fans

இது தொடர்பான வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh latest insta video viral among fans

People looking for online information on Cook with comali, Pugazh, Viral video will find this news story useful.