NFT யில் ஏலத்துக்கு வரும் SPB-யின் கடைசி பாடல்..? ரசிகர்கள் நெகிழ்ச்சி.. முழு விபரம்!
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பாடல் NFT யில் ஏலத்துக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
Oscar 2022 : வில் ஸ்மித் அடித்தது குறித்து நடிகை சமந்தா போட்ட வைரல் பதிவு!
SPB
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். காந்த குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி சிறந்த பிண்ணனி பாடகருக்கான தேசிய விருதினை 4 முறை வென்றவர் ஆவார். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலே பாடி, சாதனை புத்தகத்திலும் இடம்பெற்ற இவர் டப்பிங், நடிப்பு, இசை என பல்துறையிலும் சிறந்து விளங்கினார்.
கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தது இசை உலகையே அதிர்ச்சியில் ஆழத்தியது. இன்றும் தன்னுடைய பாடல்களின் வழியாக எஸ்பிபி மக்களால் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில் அவருடைய கடைசி பாடல் ஒன்று டிஜிட்டல் தளமான NFT யில் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
NFT
மனிதகுலம் தோன்றியது முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் உலகை ஸ்தம்பிக்க செய்திருப்பதுதான் இந்த NFT எனப்படும் Non-Fungible Token. இந்த தொழில்நுட்பம் மூலமாக மக்கள் தங்களது பிரத்யேக படைப்புகளை டிஜிட்டல் வடிவில் மாற்றி விற்பனை செய்யலாம். இதில் தான் புகழ்பெற்ற எஸ்பிபியின் பாடல் ஏலத்தில் விடப்பட இருக்கிறது.
கடைசி பாடல்
கடந்த 2020 ஆம் ஆண்டு எஸ்பிபி பாடிய இந்த பக்தி பாடல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. 'விஸ்வரூப தரிசனம்' என்ற ஆல்பத்தை எஸ்பிபி, முன்னணி இசை நிறுவனமான சிம்பொனி ரெக்கார்ட்ஸுடன் இணைந்து பதிவு செய்தார். அதன்பின்னர் அவருடைய உடல்நிலை மோசமானதன் காரணமாக, இப்பாடல் வெளியீடு நடைபெறாமல் போயிருக்கிறது. இந்நிலையில் 30 நிமிடங்கள் ஓடும் இந்த பாடலை NFT யில் வெளியிட இருக்கிறது Diginoor நிறுவனம்.
இந்த பாடலை ஏலத்தில் வாங்குபவருக்கு பதிப்புரிமையில் 51 சதவீதம் வழங்கப்படும் என்றும், பாடலை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும், அதை எந்த வகையிலும் மாற்றியமைப்பதற்கும் அல்லது மறுஉருவாக்கம் செய்வதற்கும் NFT வைத்திருப்பவருக்கு உரிமை அளிக்கப்படும் என்று Diginoor தெரிவித்துள்ளது.
ஏலம்
இந்த பாடலின் ட்ரைலர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த பாடலுக்கான ஏலம் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் எனவும் இப்பாடல் தோராயமாக ரூ. 1.14 கோடி வரையில் ஏலத்தில் விற்கப்படலாம் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் பாடல் NFT தளத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதாக வெளிவந்த தகவல் பல இசை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
TRENDING: முதல் முறையாக நடிகை தமன்னா வெளியிட்ட மாலத்தீவு Mash Up பிகினி வீடியோ!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Radhe Shyam Team Announces To Release NFT Exclusive Collectibles
- Radhe Shyam Team Announced NFT Release Event
- Rajinikanth Emotional Tweet SPB Sung Annaatthe Song At Last
- Rajinikanth Annaatthe First Single Released With Spb Vocal
- SPB's Last Song For Superstar Rajinikanth's Annaatthe Is Sure To Win Hearts; Viral Video
- T Rajendar Reveals Why He Didnt Attend SPB Funeral Video
- SPB Wanted To See Me In Last Mins Illayaraja Emotional Video
- "En Annaiyya Balu..." Kamal Haasan's Emotional Note For SPB On The Singer's Death Anniversary
- Superstar Rajinikanth’s Annaatthe First Single To Be Out On This Important Date Ft SPB Death Anniversary
- Manobala Shares RARE BTS Image With Three Legends SPB And Ilayaraja! Can You Guess The Third Singer
- Bhavna Balakrishnan Pays Tribute To Two Legends SPB
- Sivaangi Pays Musical Tribute To SPB Watch Video Here
தொடர்புடைய இணைப்புகள்
- 'SPB Song பாடிய நடிகர் சுரேஷ்கோபி'.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்..! ஆனந்த கண்ணீரில் அரங்கம்
- "வாய்ல Music போடுறேன்னு கிண்டல் பண்ணுறாங்க" மனமுடைந்து பேசிய TR
- SIVAANGI நல்ல Actor Or Singer..? UNNI KRISHNAN Shares Manjal Nila Experiences
- AR Rahman Music's-அ தனித்தனியா Explain பண்றவங்களுக்கு Doctorate குடுக்கணும்-New York Raja Interview
- தினமும் Biriyaani & Fried Rice சாப்பிடுறது எவ்ளோ ஆபத்து? - Doctor Deepak Subramaniam Interview
- 🔴 Vijay Yesudas-க்கு நடந்த Car Accident... நள்ளிரவில் விபத்து, காரணம் இது தான்
- அப்பாவோட இந்த Songs எனக்கு பெருமைதான் -SP Charan-Vijay Performs SPB-Yesudas Songs! Soulful Interview
- இறந்தும் வாழும் SPB! |இசைக்கோயிலாக மாறி வரும் நினைவிடம் - 1st Live Visit!
- இசைக் கோயிலாக மாறிய SPB- யின் நினைவிடம் - Live Visit
- UNSEEN: SPB Sir குடும்பத்துடன் சந்தோஷ தருணங்கள், Throwback Family Moments
- SPB-க்கு Best Ever Emotional Live Tribute! Sarangi Manonmani's Soulful Performance!
- 🔴LIVE: SPB நினைவுகளை பகிரும் நினைவஞ்சலி கூட்டம் - ஒன்று கூடிய திரை பிரபலங்கள்