கமல் நடிக்கும் 'விக்ரம்' இசை வெளியீட்டு விழா! பிரபல TV சேனலில் ஒளிபரப்பு! எப்போ? எதுல? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்; படத்தின் இசை வெளியீட்டு விழா பிரபல டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

Vikram Movie Audio Launch telecast on vijay tv channel

Also Read | 14 மாதங்களுக்கு பின் தியேட்டரில் ரிலீஸாகும் தனுஷ் படம்.. ரிலீஸ் எப்போ? முழு தகவல்

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vikram Movie Audio Launch telecast on vijay tv channel

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் பட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது.

Vikram Movie Audio Launch telecast on vijay tv channel

இவ்விழாவில் பேசிய பா.ரஞ்சித் & கமல்ஹாசன்,  தங்களது அடுத்த படங்களை உறுதி செய்தனர். மேலும் படக்குழுவினர் விக்ரம் படம் பற்றிய பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழா, வரும் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் வைக்கப்பட்டுள்ளது.

Vikram Movie Audio Launch telecast on vijay tv channel

விக்ரம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் சேட்டிலைட் உரிமத்தை  ஸ்டார்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் மொழியில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும், மலையாள மொழியில் ஏசியா நெட் சேனலும், இந்தியில் ஸ்டார் கோல்ட் சேனலும், கன்னட மொழியில் ஸ்டார் சுவர்ணா சேனலும், தெலுங்கு மொழியில் ஸ்டார் மா சேனலும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Audio Launch telecast on vijay tv channel

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vijay tv, Vikram Movie, Vikram movie audio launch, Vikram Movie Audio Launch telecast will find this news story useful.