www.garudabazaar.com

"அந்த லாரி மட்டும் நேர வந்திருந்தா".. Vishal ஷூட்டிங் விபத்து குறித்து S.J. சூர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

Sj Suryah about Mark Anthony Movie Shooting accident Vishal

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அட.. இந்தியன்-2 லுக்கில் வாக்கிங் போகும் ஆண்டவர் கமல்‌.! தெறிக்கும் கேப்ஷன்.!!

இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார் மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரிக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

Sj Suryah about Mark Anthony Movie Shooting accident Vishal

Images are subject to © copyright to their respective owners.

பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில்,  பிரத்யேக லாரி ஒன்று கட்டிடத்தினை இடித்து வரும் போது கட்டுப்பாட்டை இழந்து செட்டின் சுவரில் மோதும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.  இது தொடர்பான வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Sj Suryah about Mark Anthony Movie Shooting accident Vishal

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யா தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி 🙏நூலிழையில் உயிர் தப்பினோம்…. தற்செயலாக, நேராக ரூட் எடுப்பதற்கு பதிலாக, லாரி கொஞ்சம் குறுக்காக சென்றதால் விபத்து நடந்தது, லாரி நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் (விஷால் & எஸ் ஜே சூர்யா) இப்போது ட்வீட் செய்திருக்க மாட்டோம், கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்தோம் 🙏🙏🙏🙏" என ட்வீட் செய்துள்ளார்.

Also Read | மயில்சாமி இறந்த அன்று என்ன நடந்தது ..? உடைக்கும் அவரது மகன் யுவன்..

"அந்த லாரி மட்டும் நேர வந்திருந்தா".. VISHAL ஷூட்டிங் விபத்து குறித்து S.J. சூர்யா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sj Suryah about Mark Anthony Movie Shooting accident Vishal

People looking for online information on Mark Antony, Sj suryah, Vishal will find this news story useful.