www.garudabazaar.com
iTechUS

"விஷால், எஸ்ஜே சூர்யா".. 2 பேரும் இப்டி ஒரு மிரட்டல் லுக்ல இருக்காங்களே.. அசத்தும் Mark Antony போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் & SJ சூர்யா நடிப்பில் உருவாகிவரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

Vishal and SJ Suryah mark antony movie new poster released

Images are subject to © copyright to their respective owners

விஷாலின் 33 ஆவது படமாக உருவாகி வருகிறது மார்க் ஆண்டனி திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலின் 'எனிமி' படத்தைத் தயாரித்த S வினோத்குமார், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய 'வலிமை' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர்களான கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். கலை இயக்குனராக உமேஷ் ராஜ்குமார் பணியாற்றுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது.

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரியும் நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான சுனிலும் மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இவர், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கார்த்தி நடிக்கும் ஜப்பான், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஷால், எஸ்ஜே சூர்யா மற்றும் சுனில் ஆகிய மூன்று பேரும் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ஒன்றை மார்க் ஆண்டனி படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், நடிகர் விஷால் முழுக்க தாடியுடன் நெற்றியில் பட்டை அணிந்தபடி மாஸான லுக்கில் இருக்க, எஸ்ஜே சூர்யாவும் நீண்ட மீசையுடன் Vintage லுக்கில் பழைய மாடலில் பெல்ஸ் பேண்ட் மற்றும் நீளமுள்ள காலர் சட்டையுடனும் இருக்கிறார்.

Image Credits : Vishal Twitter

இதே போல நடிகர் சுனிலும் வெள்ளை முடியுடன் வேட்டை கட்டிக் கொண்டு இருக்கிறார். மூன்று பேருமே மாஸான ஒரு லுக்கில் ஆக்ரோஷம் கலந்திருக்கும் நிலையில், பலரும் இந்த போஸ்டரை கண்டு வியந்து போகவும் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vishal and SJ Suryah mark antony movie new poster released

People looking for online information on Aadhik Ravichandran, Mark Antony, Sj suryah, Vishal will find this news story useful.