www.garudabazaar.com

குடும்பத்துடன் உணவருந்தும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்..

Super Star Rajinikanth Ate Food with Family Members

'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

Super Star Rajinikanth Ate Food with Family Members

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் உணவு உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அண்ணன் சத்ய நாராயணா, மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் டிவிட்டரில் ரஜினிகாந்த் பெயரின் கீழ் பதிவிட்டும் வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Ate Food with Family Members

People looking for online information on Rajinikanth, Super Star will find this news story useful.