www.garudabazaar.com

Bakasuran : “நெஞ்சை பதைபதைக்க வைக்குது.!” - பகாசூரன் & 'நடிகர்' செல்வராகவனுக்கு குவியும் பாராட்டுகள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

SJ Suryah GV Prakash Selvaraghavan Praises Bakasuran

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நட்டி இடம்பெற்ற காட்சியொன்றின் பிரத்தியேக ஸ்னீக் பீக் வீடியோவை பகிர்ந்த பகாசூரன் ஹீரோ செல்வராகவன், “நடிப்பின் சாயலே இல்லாத அருமையான காட்சி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது. உண்மை சுடுகின்றது.” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், “லெஜண்ட் செல்வராகவன் நடிப்பு பாராட்டுகளை குவிப்பதாக அறிகிறேன். அனைவரும் பகாசூரனை திரையரங்கில் பாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தமது ட்விட்டரில், “லெஜண்டரி நடிகர் செல்வராகவன் சார், ஒரு நடிகராக உங்களது பெர்ஃபார்மென்ஸ், பகாசூரன் படத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். இத்தகைய வரவேற்பினால், தங்களுக்காககவும் படக்குழுவுக்காகவும் மகிழ்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

SJ Suryah GV Prakash Selvaraghavan Praises Bakasuran

People looking for online information on Bakasuran, Mohan g, Natraj, Natty, Selvaraghavan, Sj suryah will find this news story useful.