www.garudabazaar.com

அட.. இந்தியன்-2 லுக்கில் வாக்கிங் போகும் ஆண்டவர் கமல்‌.! தெறிக்கும் கேப்ஷன்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

Kamal Haasan latest Instagram Post goes viral on social media

Images are subject to © copyright to their respective owners

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டும் வருகிறார்.

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் உலகநாயகன் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டனர். பின்னர், இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதியில்  நடைபெற்றது.  

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை பனையூரில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Kamal Haasan latest Instagram Post goes viral on social media

இந்நிலையில் கமல்ஹாசன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைபயிற்சி செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, "25,185-வது சூரிய உதயம்" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த கேப்சனை ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் புகழ்ந்து வருகின்றனர்.

தன்னுடைய பிறந்தநாளில் இருந்து தற்போது வரை உள்ள நாட்களில் தான் கண்ட சூரிய உதயத்தை கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார் என தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan latest Instagram Post goes viral on social media

People looking for online information on Indian 2, Kamal Haasan will find this news story useful.