www.garudabazaar.com

ரிலீசான லத்தி.. பால் அபிஷேகம், குதிரை பல்லக்கு என அமர்க்களம் செய்த விஷால் ரசிகர்கள்! VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால், சுனைனா நடிக்கும் 'லத்தி' படத்தின் FDFS கொண்டாட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 

Vishal Starring Laththi Movie FDFS Celebration

Also Read | தனது மகனுடன் சுஹாசினி மணிரத்னம்.. லண்டனில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!

தமிழில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் அதன்பிறகு நடித்த சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவர் தற்போது புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.

Vishal Starring Laththi Movie FDFS Celebration

லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

பாலசுப்ரமணியம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு  யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Vishal Starring Laththi Movie FDFS Celebration

இந்த படம்  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. காலை காட்சிகளில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் விஷால் ரசிகர்கள் அங்கு வைத்திருக்கும் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

Vishal Starring Laththi Movie FDFS Celebration

மேலும் குதிரை பல்லக்கு மூலம் படத்தின் பேனர்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | Naatu Naatu : 2022-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பட்டியல்.. Shortlist ஆன RRR பட பாடல்.! செம்ம சாதனை

ரிலீசான லத்தி.. பால் அபிஷேகம், குதிரை பல்லக்கு என அமர்க்களம் செய்த விஷால் ரசிகர்கள்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vishal Starring Laththi Movie FDFS Celebration

People looking for online information on Laththi, Laththi Movie FDFS Celebration, Vishal will find this news story useful.