www.garudabazaar.com
iTechUS

எம்.ஜி.ஆர் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட நடிகர் விஷால்.. தீயாய் பரவும் வைரல் போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால்.

Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

Also Read | லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'ருத்ரன்'.. ஷூட்டிங் & ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

பின்னர் இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன.

 Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

Images are subject to © copyright to their respective owners.

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.

 Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

Images are subject to © copyright to their respective owners.

லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

 Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் விஷால், தமது நெஞ்சில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது மேலாளர் ஹரி தமது டிவிட்டர் பக்கத்தில் "புரட்சி தலைவரை நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும்

புரட்சி தளபதி" என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | துணிவைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது படம்.. என்ன மாதிரியான கதை..?.. H. வினோத் EXCLUSIVE தகவல்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

People looking for online information on Legendary Leader MGR, MGR Tattoo, Vishal will find this news story useful.