www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடிக்கும் புதிய படம்.. என்ன மாதிரியான கதைக்களம்? SK சொன்ன பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்களை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார்.

SivaKarthikeyan Talks about his next film with Kamal Haasan RKFI

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பழங்கால பேருந்தில் பயணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. லால் சலாம் படத்தின் வைரல் BTS போட்டோஸ்  

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan Talks about his next film with Kamal Haasan RKFI

Images are subject to © copyright to their respective owners.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மாவீரன் படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் புதிய படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார், இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

SivaKarthikeyan Talks about his next film with Kamal Haasan RKFI

Images are subject to © copyright to their respective owners.

சில மாதங்களுக்கு முன் இது குறித்து கமல் ஹாசன் டிவிட்டரில் "சில வேலைகள்  சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி & RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்" என ட்வீட் செய்திருந்தார்.

SivaKarthikeyan Talks about his next film with Kamal Haasan RKFI

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஆகஸ்ட் 14, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.‌ அப்போது அவர், தமது அடுத்த படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். "அடுத்ததாக தான் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளேன். படத்தின் கதைக்களம் குறித்து தான் எதுவும் சொல்ல முடியாது." என சிவகார்த்திகேயன் பதில் அளித்தார்.

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சிரஞ்சீவி.. நெகிழ்ந்து போன குஷ்பு.! வைரல் போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Talks about his next film with Kamal Haasan RKFI

People looking for online information on Kamal Haasan, Sai Pallavi, Sivakarthikeyan, Sivakarthikeyan next Film will find this news story useful.