www.garudabazaar.com

மாவீரன் படத்தின் கதைக்களம் & ஷூட்டிங்.. முதல்முறையாக மனம் திறந்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாவீரன் படத்தின் கதைக்களம் மற்றும் ஷூட்டிங் அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார்.

SivaKarthikeyan about Maaveeran Mahaveerudu Story Shooting

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அயலான் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?.. சிவகார்த்திகேயன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!   

"டான்" படத்துக்கு பின், ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்  கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SivaKarthikeyan about Maaveeran Mahaveerudu Story Shooting

Images are subject to © copyright to their respective owners.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஆகஸ்ட் 14, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.‌ அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் மாவீரன் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தின் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு  முடிந்து விட்டது.

SivaKarthikeyan about Maaveeran Mahaveerudu Story Shooting

Images are subject to © copyright to their respective owners.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்.  அடுத்ததாக எனக்கு மாவீரன் படம் ரிலீஸ் ஆகும். மாவீரன் படத்தின் கதைக்களம் புதியது. இதுவரை நான் செய்யாத புதிய கதைக்களம் அது. இந்த கதைக்களத்திற்கு ஏற்ப ஷூட்டிங் செய்ய மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது.  இயக்குனர் மடோன் அஸ்வினிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுள்ளேன்." என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

Also Read | "மாவீரன் ஷூட்டிங்ல இயக்குனருடன் சண்டையா?".. தெறியான பதில் அளித்த சிவகார்த்திகேயன்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan about Maaveeran Mahaveerudu Story Shooting

People looking for online information on Maaveeran, Sivakarthikeyan will find this news story useful.