www.garudabazaar.com

பிரசித்தி பெற்ற இத்தாலி நகரில் கமல்ஹாசன்.. இந்தியன் 2 லுக்கில் வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக கதாநாயகனாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

Kamal Haasan shared a photo from Italy via della spiga

Images are subject to © copyright to their respective owners.

Also Read | லோகேஷ் கனகராஜ் BIRTHDAY பார்ட்டியில் த்ரிஷா.. யாரோட இருக்காங்க பாருங்க.. வைரல் போட்டோ!   

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றைத் துவக்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். KH - House of Khaddar என ஒரு நிறுவனத்தையும்  கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.

Kamal Haasan shared a photo from Italy via della spiga

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விக்ரம் படத்தினை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

Kamal Haasan shared a photo from Italy via della spiga

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல் ஹாசன், இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள வியா டெல்லா ஸ்பிகா என்ற புகழ்பெற்ற தெருவில் தான் நடந்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு தலைப்பாக "அனைத்து தெருவும் வீட்டிற்கே செல்லும்" என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே சகுந்தலம் படம் பார்த்த சமந்தா & தில்ராஜூ.. வைரல் பதிவு 😍

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan shared a photo from Italy via della spiga

People looking for online information on Della spiga, Italy, Kamal Haasan will find this news story useful.