www.garudabazaar.com

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா?.. கலகலப்பாக பதில் சொன்ன DADA கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” பட நடிகர் கவின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Kavin Answered about SivaKarthikeyan in Jailer Movie

Also Read | 'பத்து தல' வெற்றிக்காக.. வித்தியாசமான கோஷத்துடன் பழனியில் சாமி தரிசனம் செய்த கூல் சுரேஷ்!

நடிகர் கவின் நடிப்பில் ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Kavin Answered about SivaKarthikeyan in Jailer Movie

இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் கவின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் கவின் Fans Festival என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Kavin Answered about SivaKarthikeyan in Jailer Movie

மீம்ங்களை பகிர்ந்து அந்த மீமில் இருந்து கேள்விகள் கவினிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக "ஜெயிலர் குடும்பத்தில் எல்லாரும் இருக்காங்க. சிவகார்த்திகேயன் இல்லையா?".. என்ற கேள்விக்கு "சிவகார்த்திகேயன் இல்லையா? இருக்காரா? என கவின் பதில் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த நெறியாளர், "நீங்கள் தான் சொல்லனும். நீங்கள் தான் இயக்குனர் நெல்சனுக்கு நெருக்கமானவர்." என பதில் கூறுகிறார். உடனே கவின், "Official-அ வந்துருக்கா எதாவது?" என கேள்வி எழுப்பினார். "முன்னதாக சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக தகவல் வந்தன.

Kavin Answered about SivaKarthikeyan in Jailer Movie

இப்போது அவர் படத்தில் இல்லை என்பது போல சொல்றாங்க." என நெறியாளர் பதில் அளிக்க, "அப்படி சொல்றாங்களா?" என கவின் மீண்டும் கேள்வி எழுப்பினார். "ஆமா சொல்றாங்களே" என நெறியாளர் கூற "நீங்க என்ன சொன்னாலும் அதை நான் அப்படியே கேட்டுக்கிறேன். ஏன்னா இதை புதுசா கேக்குறேன்." என கவின் ஜாலியாக பதில் அளித்தார்.

Also Read | எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.. அனுமதியின்றி வெளியான PHOTO-க்களால் கடுப்பான ஆலியா பட்..!

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இருக்காரா?.. கலகலப்பாக பதில் சொன்ன DADA கவின் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Answered about SivaKarthikeyan in Jailer Movie

People looking for online information on Dada, Jailer, Kavin, Sivakarthikeyan will find this news story useful.