www.garudabazaar.com

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சிரஞ்சீவி.. நெகிழ்ந்து போன குஷ்பு.! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு.

Chiranjeevi surprises Kushboo for Member of NCW viral photos

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. புதிய படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்!   

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுந்தர்.சியை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Chiranjeevi surprises Kushboo for Member of NCW viral photos

Images are subject to © copyright to their respective owners.

2010 ஆம் ஆண்டு முதல் 2014-வரை திமுக கட்சியில் இருந்த குஷ்பு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2020 வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆக வலம் வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு குஷ்பு தோல்வி அடைந்தார்.

சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்தது.

Chiranjeevi surprises Kushboo for Member of NCW viral photos

Images are subject to © copyright to their respective owners.

இதனை முன்னிட்டு நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில், "இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக நரேந்திர மோடிஜிக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் எனது நன்றிகள். உங்கள் தலைமையின் கீழ் வேகமாக வளர்ந்து வரும் நாரி சக்தியைப் (பெண் சக்தி) பாதுகாக்கவும்,  மற்றும் வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன்.  ஜெய்ஹிந்த்" என குஷ்பு கூறியிருந்தார்.

Chiranjeevi surprises Kushboo for Member of NCW viral photos

Images are subject to © copyright to their respective owners.

இந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி நடிகர் சிரஞ்சீவி, "உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் குஷ்பு!

நீங்கள் நிச்சயமாக இந்த பதவிக்கு தகுதியானவர். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உங்கள் இருப்பை நம்புங்கள்.

பெண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் அதிக கவனம் செலுத்தி, திறமையான தீர்வை உறுதி செய்யுங்கள்.  அவர்களின் குரலை மேலும் வலுப்படுத்துங்கள். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!" என சிரஞ்சீவி வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு சிரஞ்சீவி சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். தமது குழுவுடன் சென்று குஷ்புவை பொன்னாடை மலர் கொத்து கொடுத்து சிரஞ்சீவி  வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை குஷ்பு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | ஆயுத பூஜைக்கு LEO படத்தோடு ரிலீஸாகும் புதிய மாஸ் ஹீரோ படம்.. வெளியான சூப்பர் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Chiranjeevi surprises Kushboo for Member of NCW viral photos

People looking for online information on Chiranjeevi, Khushboo, Member of NCW will find this news story useful.