www.garudabazaar.com

"மாவீரன் ஷூட்டிங்ல இயக்குனருடன் சண்டையா?".. தெறியான பதில் அளித்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

Maaveeran Mahaveerudu SivaKarthikeyan answer about Madonne Ashwin

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மறுபடியும் யாரையாவது Dating பண்ணுங்க".. ரசிகரின் கேள்விக்கு சமந்தா அளித்த செம்ம பதில்!  

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.

"டான்" படத்துக்கு பின்,  இயக்குனர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்   தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

Maaveeran Mahaveerudu SivaKarthikeyan answer about Madonne Ashwin

Images are subject to © copyright to their respective owners.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Maaveeran Mahaveerudu SivaKarthikeyan answer about Madonne Ashwin

Images are subject to © copyright to their respective owners.

"மாவீரன் ஷூட்டிங்ல இயக்குனருடன் சண்டையா?"..  தெறியான பதில் அளித்த சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு காது குத்தி மொட்டை போட சொந்த ஊரான திருவீழிமிழலைக்கு குடும்பத்துடன் வந்து மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த வீடியோ & புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தன.

மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Maaveeran Mahaveerudu SivaKarthikeyan answer about Madonne Ashwin

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக் நடித்த 16 ஆகஸ்ட் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, "மாவீரன் படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வந்ததே" என்ற கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "சிரித்துக் கொண்டே.. தெரியலையே. எங்களுக்குள்ள அப்படி எதுவும் இல்லை. ஏன் அந்த செய்தி வந்ததும் என்றும் தெரியவில்லை. மாவீரன் படத்தின் படப்பிடிப்பை அருமையாக முடித்து விட்டோம்." என சிவகார்த்திகேயன் பதில் அளித்தார்.

Also Read | அயலான் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?.. சிவகார்த்திகேயன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Maaveeran Mahaveerudu SivaKarthikeyan answer about Madonne Ashwin

People looking for online information on Maaveeran, Madonne Ashwin, Sivakarthikeyan will find this news story useful.