www.garudabazaar.com

பழங்கால பேருந்தில் பயணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. லால் சலாம் படத்தின் வைரல் BTS போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth Lal salaam shooting spot BTS Images

Images are subject to © copyright to their respective owners.

Also Read | திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த சிரஞ்சீவி.. நெகிழ்ந்து போன குஷ்பு.! வைரல் போட்டோஸ்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் படத்தினை  இயக்கி வருகிறார்.

Aishwarya Rajinikanth Lal salaam shooting spot BTS Images

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth Lal salaam shooting spot BTS Images

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

Aishwarya Rajinikanth Lal salaam shooting spot BTS Images

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் என்ற பெயரில் உள்ள பழைய பேருந்தில் ஒளிப்பதிவாளர் உடன் படப்பிடிப்பு செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். படக்குழுவினர் உடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படிக்கட்டுகளில் பயணம் செய்தபடி இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

Also Read | சீனு ராமசாமி இயக்கத்தில் நெப்போலியன்.. புதிய படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth Lal salaam shooting spot BTS Images

People looking for online information on Aishwarya Rajinikanth, Lal Salaam, Lal salaam shooting spot will find this news story useful.