Kaateri logo top
www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்.. வில்லனாக மிஷ்கின்! வெளிவந்த கொலமாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக மிஷ்கின் இணைந்துள்ளார்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Villain Mysskin

Also Read | சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Villain Mysskin

மிஷ்கின் ஏற்கனவே சவரக்கத்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள். இந்த படத்தின் எடிட்டராக பிலோமின் ராஜ் பணிபுரிகிறார்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Villain Mysskin

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

 

Also Read | நடிகர் அஜித்தின் 10 புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. இதான் காரணமா!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Villain Mysskin

People looking for online information on Maaveeran Movie, Maaveeran Movie Villain Mysskin, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie will find this news story useful.