Kaateri logo top
www.garudabazaar.com

கிளாசிக் லுக்கில் KGF புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி..பிரபல போட்டோ கிராபருடன் அடுத்த போட்டோ ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஶ்ரீ நிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

Also Read | சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு

துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி தற்போது விக்ரம் உடன் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த  KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார்.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது முகநூல் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். மஞ்சள் நிற உடையில் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கேமரா செந்தில் எடுத்துள்ளார்.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது கோப்ரா படத்தில் பாவனா மேனன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

Also Read | பிரபல போட்டோகிராபருடன் போட்டோ ஷூட்.. அசத்திய KGF புகழ் ஶ்ரீநிதி ஷெட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

KGF Actress Srinidhi Shetty Latest Classic Photoshoot Photos

People looking for online information on KGF Actress Srinidhi Shetty, Srinidhi Shetty, Srinidhi Shetty Latest Photoshoot will find this news story useful.