Pattamboochi

ஜாலியோ ஜிம்கானா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'பீஸ்ட்' படத்தின் வேற லெவல் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட் எனப்படும் தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய்.

SivaKarthikeyan Shared Beast Movie BTS Image with Vijay

Also Read | அஜித் நடிப்பில் 90ஸ் கிட்ஸின் ஃபேவ்ரைட் படம்.. இயக்குநருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்..!

தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.  நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். கடந்த ஏப்ரல் 13 அன்று இந்த படம் திரையரங்கில் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கனிசமான வரவேற்பையும் பீஸ்ட் படம் பெற்றது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார்.

SivaKarthikeyan Shared Beast Movie BTS Image with Vijay

நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது முகநூலில் விஜய்யுடன் தான் இருக்கும் 'பீஸ்ட்' படத்தின் BTS போட்டோவை வெளியிட்டு நடிகர் விஜய்யை வாழ்த்தியுள்ளார்.

SivaKarthikeyan Shared Beast Movie BTS Image with Vijay

இந்த BTS போட்டோ டான் படக்குழு, பீஸ்ட் படக்குழுவை சந்தித்த பொழுது எடுக்கப்பட்டது. ஜாலியோ ஜிம்கானா பாடலின் செட்டில் இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்தது.

SivaKarthikeyan Shared Beast Movie BTS Image with Vijay

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.

Also Read | அட.. RJ பாலாஜியும் மல்டிவர்ஸ் பண்ணிருக்காருப்பா.! வீட்ல விசேஷம் படத்துல இத நோட் பண்ணீங்களா..?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Shared Beast Movie BTS Image with Vijay

People looking for online information on Beast Shooting spot, Don Shooting spot, Sivakarthikeyan, Thalapathy Vijay, Thalapathy vijay with Sivakarthikeyan will find this news story useful.